Monday, July 20, 2009

தடாலடி பதில்கள்

குளிப்பாட்டுபோது கை வாகாக இருக்க.. சுவற்றைப்பார்க்க உக்காரு என்று சொல்லி முகத்தில் சோப்பு போட்டுவிடுவேன்.3 வயது வரை கேட்டவன். 4 வது வயதில் திரும்ப கேட்டான் . ”சுவறு எல்லா பக்கத்திலயும் தானே இருக்கு?”
“ ஆஹா.. ஆமாம்ப்பா ஆமா.. தண்ணி வாளி இல்லாத சுவற்றுபக்கம் திரும்புப்பா கொஞ்சம்..”
-------------------------------------------
'தூங்கலாம் வாடா"
”மதியம் எதுக்கு தூங்கனும்?”
”தூங்கினாத்தான் வளருவாங்க .. ”

பள்ளிக்கூடம் போக ஆரம்பித்த இரண்டுநாள் கழித்து ஒரு மதியம்.

”தூங்கலாம் வாடா
”எதுக்கு தூங்கனும்?”
”வளரத்தான் ...”
”இல்லயே டீச்சர் சொன்னாங்க தூங்கிட்டே இருந்தா வளர முடியாது. சீக்கிரம் எழுந்து பள்ளிக்கூடம் வந்து படிச்சாத்தான் வளரலாமாம்.'
(ஙே ..... :(
இருந்தாலும் சமாளித்துக் கொண்டு..)

”அதுவும் சரிதான் அம்மா சொன்னதும் சரிதான். காலையில் எழுந்திருக்கனும் படிக்கனும் .பின்ன மதியம் தூங்கனும். திரும்ப சாயங்காலம் படிக்கனும். ராத்திரி தூங்கனும். காலையில் எழுந்திருச்சு ஸ்கூல் போய் படிக்கனும். ரெண்டும் மாற்றி மாற்றி செய்யனும்ண்டா கண்ணா!..”
--------------------------------------------------------

கடைக்கு யாரு போனாலும் இவரும் கூடப்போவார். மார்க்கெட் போகும்போது மட்டும் கால் வலிக்காது . ஒரு நாள் தாத்தா மழையா இருக்கேன்னு கடைக்குக் கூட்டிட்டு போகல.( அம்மா தாத்தாக்கு பர்மிசன் குடுக்கல). வீடு வந்த பிறகு தாத்தா
“மழையா இருந்தது அதான் பயம்மா இருந்தது கடைக்குக் கூட்டிட்டு போக முடியல”ன்னு மத்தவங்க கிட்ட வருத்தப்பட்டுக் கொண்டிருக்க.. சார் பாதி பேச்சில் உள்ளே வந்தவர்....பயம்மா இருந்தது என்பதை மட்டும் காதில் வாங்கிவிட்டு...

“ இதுக்குத்தான் கூட யாரயாச்சும் கூட்டிட்டு போயிருந்தா உங்களுக்கு பயம்மா இருக்காது .. என்னைத்தான் விட்டுட்டுப் போயிட்டீங்களே “...

;)))))
--------------------------------------------------------
இடம்:(ஸ்வீட் கடையும் பொம்மைக் கடையும் பக்கத்து பக்கத்துல இருந்தது)

கடையில் எனக்காக எதுமே வாங்கமாட்டியா..?”
”என்ன வாங்கனும் உனக்கு?”
“ நான் என்ன டாய் வேணும்ன்னா கேட்டேன்? ஸ்வீட் தானே கேக்கறேன் “

இனிப்பு வாங்கியாச்சு.

இடம்:அக்கா சாட் பேப்பர் வாங்கும் கடை.
மறுபடியும் ‘எனக்கு எதுவுமே வாங்கமாட்டியா?
”அடிவிழப்போகுது என்னவேணும் உனக்கு இப்ப?”
என் கைகளைக் சேர்த்து அடிக்கமுடியாதபடி பிடித்துக்கொண்டு
அடிக்காம சரின்னு சொல்லி பிஸ்கட் வாங்கிக்குடு
“பிஸ்கட் வீட்டுல நிறைய இருக்கு அடிதான் விழப்போது சும்மா தொணத்தொணக்கிறே”
அடிக்கக்கூடாதுன்னு இப்பத்தானே சொன்னேன்
“நான் தான் அடிக்கலயே அடிவிழப்போகுதுன்னு தானே சொன்னேன், ஏய் உனக்கு எதுவும் வாங்கலன்னு திரும்பவும் எப்படி சொல்றே அதான் இனிப்பு வாங்கியாச்சே .. நீ மறந்துட்ட நானும் மறந்துட்டேன் பாரு”

“சரி சரி .. ஆமா இப்ப என்னத்துக்கு சிரிக்கிறே?”
அடே அடிக்கத்தான் கூடாது சிரிச்சா தப்பாடா?”

4 comments:

  1. ஹாஹாஹா... மழலை மொழி அழகு. சீக்கிரம் உங்க பையனைப் பார்க்கணும் போல இருக்கு அக்கா.

    ReplyDelete
  2. :-)) இது சபரிக்கு நீங்க பல்பு கொடுத்த கதை போலிருக்கே...நீங்க பல்பு வாங்கினதையும் போடுங்க!!

    ReplyDelete
  3. ச்சோ ச்வீட் :) சுட்டி தந்த ராமலக்ஷ்மிக்கு நன்றி :)

    ReplyDelete