ரொம்ப நாளா தமிழ் பாட்டு ஒண்ணு சொல்லிக்கொடுக்கனும்ன்னு அவன் காதிலே கேக்கறா மாதிரி ”நிலா நிலா ஓடிவா” பாடிக்கிட்டே இருந்ததில் அவன் தானாகவே பின்பாட்டு “வா” வா” எனப் பாட ஆரம்பிச்சு இப்பல்லாம் ஒரு தமிழ்பாட்டுன்னா போதும், உடனடியாக தலைவர் நிலா நிலா ? அப்படின்னு கேட்பார். ஆமாம்ன்னா குஷியா பாடுவார். ஆனா சில நேரம் அது ரீமிக்ஸ் மாதிரி விதவிதமான மாடுலேசனில் வரும். (என்ன ஒரு இசைக்குடும்பமப்பா !!!)
-----------------------------------------
குளித்தவுடன் சாமி கும்பிட என்று இந்த பாலும் தெளிதேனும் என்ற பாடலை தினமும் அவனுக்கு சொல்லச்சொல்ல திரும்ப கிளிப்பிள்ளையாக பாடுவான் . இப்போது தானாகவே பாடத்தொடங்கிவிட்டான்.
----------------------------------------------
தினம் ஒரு திருக்குறள் என்ற வகையில் போனமாதம் சபரி அப்பா ஒரு 5 திருக்குறளை அறிமுகப்படுத்தினாங்க. முதல் திருக்குறள் செவிச்செல்வமாக அதிகம் கேட்டு கேட்டு அடுத்த வாரம் தானாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டான். ஆனால் அதுவரை மற்ற திருக்குறள்களை சொல்லச்சொல்ல திரும்ப சொல்லிக்கொண்டிருந்தவன் . இதுமட்டும் தான் ஈஸியானது மத்ததெல்லாம் கஷ்டம்ன்னு தானாகவே நம்பிக்கை இழந்து சொல்லவரலை என்று நினைத்துக்கொண்டான். அது அதிகம் தினம் கேட்டால் வந்துவிடும் என்ற நம்பிக்கையை தூண்டிக்கொண்டிருந்ததில் இன்று மற்ற பாடல்களை ரெக்கார்ட் செய்யும் போது தானாகவே நோய்நாடி குறளையும் சொல்லவா என்று கேட்டுவிட்டு தானாகவே சொல்லிவிட்டான்.
பாடும்போது ரெக்கார்டரில் வரும் கலர் கலர் லைட்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.. அதன்காரணமாக சில சமயம் வெவ்வேறு விதமாக சொல்லிப்பார்த்துக்கொண்டிருந்தான்.
selvathul selvam
noi nadi